23 ஆண்டுகால தலைமறைவு வாழ்க்கை…! மகனின் பாலியல் அத்துமீறல் வழக்கால் சிக்கிய தந்தை… இரட்டைக் கொலை குற்றவாளி கைது… பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2026

Spread the love

பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில் சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட நந்தன் யாதவ் என்பவரைப் போலிஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த வழக்கின் விசாரணையின் போது, எதிர்பாராதவிதமாக ஒரு திடுக்கிடும் உண்மை அம்பலமானது.

நந்தன் யாதவின் தந்தை, கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற கொடூர இரட்டைக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி என்பதும், அவர் கடந்த 23 ஆண்டுகளாக போலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மகனின் பாலியல் அத்துமீறல் வழக்கை விசாரித்த போலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், 23 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த அந்த நபரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

   

மகனின் கொடூர குற்றச்செயலை விசாரிக்கப் போய், கால் நூற்றாண்டாகப் போலிஸாரை ஏமாற்றி வந்த தந்தையும் தற்போது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.