உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில், கஞ்சா வாங்குவதற்கு ரூ. 60 தராததால், 51 வயதான முலா தேவி என்பவரை அவரது 28 வயது மகன் மோகன் யாதவ் கோடாரியால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயிடம் கஞ்சா வாங்கப் பணம் கேட்டு மோகன் யாதவ் தகராறு செய்துள்ளார். அதற்குத் தாய் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவன், வீட்டில் இருந்த கோடாரியை எடுத்துத் தாயின் கழுத்துப் பகுதியில் அடுத்தடுத்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளான். இதில் பலத்த காயமடைந்த முலா தேவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்த பிறகும் எவ்வித அச்சமும் இன்றி, மோகன் யாதவ் தனது தாயின் உடலுக்கு அருகிலேயே சுமார் இரண்டு மணி நேரம் அமைதியாக அமர்ந்திருந்துள்ளான். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மோகன் யாதவைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
