“காரினுள்ளே இழுத்து செல்ல முயற்சி…” தோழியுடன் நடந்து சென்ற கல்லூரி மாணவிக்கு ஷாக்… நடுரோட்டில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2026

Spread the love

டெல்லியில் முகர்ஜி நகர் பகுதியில் உள்ள ஹகீகத் பார்க் அருகே, கல்லூரி மாணவி ஒருவரும் அவரது தோழியும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கருப்பு நிற டாடா சஃபாரி காரில் வந்த நபர் மற்றும் அவரது கூட்டாளிகள் அவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

மேலும், அந்த மாணவிகளை வலுக்கட்டாயமாகக் காரினுள்ளே இழுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அங்கிருந்து தப்பி ஓடி தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.

   

இச்சம்பவம் குறித்துப் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விரைந்து செயல்பட்ட டெல்லி போலிஸார் சஃபாரி காரின் பதிவு எண்ணை வைத்து வாகனத்தைக் கண்டுபிடித்தனர். மேலும், காரை ஓட்டி வந்த நமன் குமார் என்பவரைக் கண்டறிந்து, முகர்ஜி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.