“80 விண்ணப்பம் தான் நிரப்புவியா…?” உயர் அதிகாரியின் அழுத்தம்… SIR பணியில் ஈடுபட்ட பெண் தற்கொலை… பகீர் சம்பவம்….!!

By Devi Ramu on கார்த்திகை 21, 2025

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம், சினர்தங்கள் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக (வி.ஏ.ஓ.) பணியாற்றி வந்தவர் ஜாகிதா பேகம். இவர் சமீப நாட்களாக வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

சுமார் 800 விண்ணப்பங்களைக் கணினியில் பதிவேற்ற வேண்டிய சூழலில், ஜாகிதா பேகம் 80 விண்ணப்பங்களை மட்டுமே பதிவேற்றம் செய்திருந்ததாகத் தெரிகிறது. வாக்காளர் திருத்தப் பணி நிறைவடைய சில நாட்களே இருந்த நிலையில், பணியை விரைவுபடுத்தக் கோரித் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் அவரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

   

தேர்தல் பணியின் தொடக்கம் முதலே ஜாகிதா பேகம் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், பணிச்சுமையைத் தாங்க முடியாமல், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

   

இவரது தற்கொலைக்கு தேர்தல் ஆணையமே முழுக்கக் காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அவரது கணவர், இப்போது இரண்டு குழந்தைகளுடன் ஆதரவின்றி நிற்பதாகக் கூறி வேதனை தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.