“அப்பா என்னை 3 முறை…” ஆசிரியரிடம் கதறிய 11 வயது சிறுமி… காமகொடூரனாக மாறிய தந்தைக்கு 178 ஆண்டுகள் ஜெயில்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on கார்த்திகை 21, 2025

Spread the love

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது 11 வயதுப் பள்ளி மாணவியான மகளை மிரட்டி, மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.  சிறுமி படிக்கும் பள்ளியில், குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச்  குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டபோது, சிறுமி தனது தந்தை நடந்துகொண்ட விதம் குறித்து ஆசிரியையிடம் கூறியதன் மூலமே இந்தச் செயல் வெளிச்சத்துக்கு வந்தது.

2022 ஜனவரி முதல் 2023 ஜனவரி வரையிலான ஓராண்டு காலத்தில், மூன்று முறை இந்த நபர் தனது மகளைப் பலாத்காரம் செய்துள்ளார். யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால், சிறுமி இது குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாகப் பள்ளி ஆசிரியை அளித்த புகாரின் பேரில், சிறுமியின் தந்தை மீது போக்சோ (POCSO) சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

   

போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஏ.எம். அஷ்ரப், பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தைக்கு 178 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10.7 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இந்த நபர், ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு பக்கத்து வீட்டு மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவரைப் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.