உத்திர பிரதேசம் மாநிலம் முரார் நகரை சேர்ந்த ஷிலூ என்பவருக்கும் ஜிதேந்தர் என்பவருக்கும் கடந்த 2018 காமாண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணம் ஆன சில மாதங்களில் கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு ஜிதேந்தர் தலைமறை வாங்கிவிட்டார். இதனைத் தொடர்ந்து தன் மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகும் ஜிதேந்தர் எங்கு சென்றார் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் தேடுதல் மற்றும் விசாரணை அப்படியே கைவிடப்பட்டது.
தன் கணவர் சென்று விட்டதால் ஷிலூ கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இப்படியான நிலையில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் கணவரை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக ஷிலூ கண்டுபிடித்துள்ளார். அவர் தன்னுடைய செல்போனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் தன்னுடைய கணவர் வேறு பெண்ணுடன் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டதை பார்த்து உள்ளார். உடனடியாக இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர்.
அப்போது அவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசித்து வருவதும் அங்கு வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டு அவரை ஏமாற்றி தலைமறைவாகி இரண்டாவது திருமணம் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் பெறும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
