உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் தியோரியா ரயில் நிலையத்தில் திருநங்கைகள் சிலர் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக புகார் வந்துள்ளது. இதனை அறிந்த ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் முகமது அங்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார். அங்கு அவர்களிடம் அமைதியாக பேசிய அவர் மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் இந்த அறிவுரையால் கோபமடைந்த திருநங்கைகள் குழுவாக இன்ஸ்பெக்டர் முகமதுவை குச்சியை கொண்டு தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற அவரை தொடர்ந்து துரத்திச் சென்ற திருநங்கைகள் தாக்கியதால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பயணிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் சிலர் ஒன்றிணைந்து இன்ஸ்பெக்டரை காப்பாற்றினர். அவரை பாதுகாப்பாக மீட்ட சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி உள்ளது.
देवरिया रेलवे स्टेशन पर किन्नरों ने जमकर बवाल मचाया। ट्रेनों में और स्टेशन पर अवैध वसूली का विरोध करने पर यात्रियों के साथ बदसलूकी की। यात्रियों की शिकायत पर मौके पर पहुंचे RPF इंस्पेक्टर पर भी किन्नरों ने हमला बोला। किन्नरों की भारी भीड़ देख इंस्पेक्टर को भागकर जान बचानी पड़ी। pic.twitter.com/rUZx6nU92h
— NBT Uttar Pradesh (@UPNBT) September 1, 2025
