அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டோன்னு கொட்டிருச்சு…! 50 ரூபாய்க்கு வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் அடித்த பெரும் தொகை…. குஷியில் மாற்றுத்திறனாளி…!!

By Devi Ramu on புரட்டாதி 2, 2025

Spread the love

லாட்டரி டிக்கெட் வாங்கினால் அதிர்ஷ்டம் கொட்டும் என நம்பிக்கையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் லாட்டரி டிக்கெட் வாங்குகின்றனர். சிலருக்கு அது ஏமாற்றத்தில் முடிகிறது. சிலருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு லாட்டரி டிக்கெட்டில் பெரும் தொகை பரிசாக விழுந்துள்ளது.

பாலக்காட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிருஷ்ணன் குட்டி. இவர் 50 ரூபாய்க்கு ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். இதற்கு முன்பு அவர் பலமுறை லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். ஆனால் இந்த முறை கிருஷ்ணன் குட்டிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை லாட்டரியில் பரிசாக அடித்தது இதுவே முதல்முறை. இதனால் கிருஷ்ணன் குட்டி மகிழ்ச்சியில் உள்ளார்.

   

பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை அருகில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளையில் டெபாசிட் செய்து பரிசு தொகையை கிருஷ்ணன் குட்டி உரிமை கோரியுள்ளார். இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் கிருஷ்ணன் குட்டியின் மூத்த மகன் வீடு கட்டி பால் காய்ச்சியுள்ளார். அதே நாளில் அவருக்கு லாட்டரியில் பெரும் தொகை பரிசாக விழுந்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.