காலில் புண்ணிற்காக சிகிச்சைக்கு சென்ற பெண் திடீர் மரணம்… தென்காசியில் பரபரப்பு..!!

Spread the love

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பெண் ஒருவர் கால் புண்ணிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று உயிரிழந்துள்ளார் .தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக அவருடைய உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து அனுமதி இன்றி நடத்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளார்கள். பாவூர்சத்திரம் அடைக்கலப்பட்டணம் வேதம்புதூர் கீழ் தெருவில் வசிப்பவர் மாரிமுத்து. இவருடைய  மனைவி சுப்பம்மாள் (67). ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இவர் காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் இவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த மருத்துவமனையில் டாக்டர் சரவணகுமார் என்பவர் அவருக்கு சிகிச்சை அளித்தார் .காலில் உள்ள புண்ணை சுத்தம் செய்து சிகிச்சை செய்தபோது திடீரென்று சுப்பம்மாள் இறந்துள்ளார். இதனை அறிந்து அவருடைய உறவினர்கள் தவறான சிகிச்சையால் தான் உயிரிழந்ததாக கூறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்கள். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுப்பம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதனையடுத்து தனியாக மருத்துவமனை தொடங்குவதற்கும் மருந்தகம் வைப்பதற்கும் அரசிடம் முறையாக அனுமதி பெற்று தெரிய வந்ததால் அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

2 மணத்தியாலங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக அதிகரிப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு… நிதிநிலை அறிக்கையில் வெளியான அதிரடித் திட்டங்கள்…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…

3 மணத்தியாலங்கள் ago