விருதுநகர் அருகே பட்டம் புதூர் தண்டவாளத்தில் நேற்று பிற்பகலில் பெண்கள் உடல் சிதறி பலியாகி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போது கடும் அதிர்ச்சி அடைந்தனர். எளிதில் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் துண்டாகி சிதறி கிடந்தன. அதனை சேகரித்து போலீசார் விசாரித்ததில் திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து 3 பெண்கள் தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிய வந்தது. தீவிர விசாரணை நடத்தியதில் பட்டம் புதூர் காலனியை சேர்ந்த தர்மன் என்பவருடைய மனைவி ராஜவல்லி (60).
இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இவர்களுக்கு மாரியம்மா (30), முத்துமாரி(27) , முத்துப்பேச்சி (25) என்ற மூன்று மகள்கள் இருந்துள்ளனர். குடும்பம் வறுமையில் இருந்த காரணத்தால் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்று ராஜவல்லி மிகவும் வருத்தப்பட்டுள்ளார். அதேசமயம் மகள்கள் மாரியம்மாள் மற்றும் முத்துப்பேச்சு இருவரும் மாற்றுத்திறனாளிகள். இதனால் ராஜ வள்ளி அவருடைய மகள்கள் மாரியம்மாள், முத்துப்பேச்சி ஆகியோர் வறுமையால் தாங்கள் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் அதனால் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்து பட்டம் புதூர் தண்டவாள பகுதிக்கு சென்றுள்ளனர்.
அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் உடல் சிதறி உயிரிழந்தனர். பிறகு வேலைக்கு சென்று விட்டு ராஜவள்ளியின் கணவர் தர்மர் மற்றும் மகள் முத்துமாரி ஆகியோர் வீடு திரும்பிய போது வீட்டில் தாய் மற்றும் சகோதரிகள் இல்லாததால் அவர்களை தேடினர். அப்போது தண்டவாளத்தில் மூன்று பெண்கள் பலியாகி கிடப்பதாக கிடைத்த தகவலை கேட்டு சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது மூன்று பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக திமுகவினர் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக செந்தில்…
தமிழகத்தில் பத்திரப்பதிவு இணையதளத்தில் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டு வருவாய்த்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி நிலத்தை…
முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (CM விஜய் எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது / தற்போதைய சூழலுக்கு ஏற்ப) குறித்த அவதூறு…
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும்…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…