அடியே… என் காதலை ஏற்க மறுத்தாயா?… காதலனால் கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண்… 2 மாதப் போராட்டத்திற்குப் பின் பரிதாப மரணம்… நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ… மகாராஷ்டிரவில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 27, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியில், வருவாய்த் துறையில் பணியாற்றி வந்த 27 வயதுடைய சினேஹல் சாவந்த் என்பவர், கடந்த ஜூன் 12 அன்று தங்கம் திரையரங்கம் அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அமோல் முலே என்ற நீதிமன்ற ஊழியரால் பின்னால் இருந்து அரிவாளால் தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதுடன், இருவருக்கும் இடையே இருந்த தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சினேஹல் சாவந்த், உள்ளூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காகப் புனேவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆபத்தான நிலையில் போராடி வந்த அவர், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 26 அன்று உயிரிழந்தார்.

   

https://twitter.com/MahmudJubaer/status/2092800115228692697/video/1

   

இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த பால்கர் காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு, தலைமறைவாக இருந்த குற்றவாளியான அமோல் முலேவைக் கைது செய்தனர். தற்போது சினேஹல் சாவந்த் உயிரிழந்ததை அடுத்து, இச்சம்பவம் தொடர்பாகக் கூடுதல் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளன.