அம்மாடியோ… இவ்வளவு பெரிய ஓணம் விருந்தா?… ஆனா எனக்குக் கிடைச்சது இந்த ஒத்த வாழைப்பழம் மட்டும்தான்… நெட்டிசென்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும்… அமைச்சரின் கலகலப்பு வைரல் வீடியோ…!

By Swetha on ஆவணி 27, 2026

Spread the love

நாகாலாந்து மாநில உயர்கல்வி மற்றும் பழங்குடி விவகாரத்துறை அமைச்சரான தேம்ஜென் இம்னா அலாங், தனது கலகலப்பான சமூக வலைதள பதிவுகள் மூலம் எப்போதுமே மக்களிடையே பிரபலமாக அறியப்படுபவர். இவர் ஓணம் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வாழை இலையில் பரிமாறப்பட்ட பாரம்பரிய ‘ஓணம் சத்யா’ சைவ விருந்தின் முன்பு அமர்ந்து கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்துடன் அவர் இந்தியில் எழுதிய விசித்திரமான மற்றும் நகைச்சுவையான கேப்ஷன் இணையத்தில் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. அதில், “ஓணம் பிரசாதம் என்று நினைத்து நான் அந்த வாழைப்பழத்தை மட்டுமே சாப்பிட்டேன்; மற்ற உணவுகளைப் புகைப்படத்திற்காக மட்டுமே தொட்டுப் பார்த்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், “இது தொழில்முறை மேற்பார்வையின் கீழ் செய்யப்படும் ஸ்டண்ட், யாரும் வீட்டில் முயற்சிக்க வேண்டாம்” என்றும் ஜோக் அடித்து பதிவிட்டிருந்தார்.

   

அமைச்சரின் இந்த கலகலப்பான மற்றும் குறும்புத்தனமான பதிவு இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் மிக விரைவாக வைரலானது. உணவு வகைகளால் நிறைந்த பிரம்மாண்டமான சத்யா விருந்துக்கு நடுவே, அவர் வாழைப்பழத்தை மட்டுமே சாப்பிட்டதாகக் கூறியதை நெட்டிசன்கள் ஆர்வமுடன் பகிர்ந்து ரசித்தனர். மேலும், ஏராளமான இணையவாதிகள் அமைச்சரின் நகைச்சுவை உணர்வைப் பாராட்டியதோடு, அவருக்குத் தங்களது ஓணம் பண்டிகை வாழ்த்துகளையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.