“ஐயோ காப்பாத்துங்க…” சாலையில் குழந்தையுடன் சென்ற தாய் மீது… திடீரென பாய்ந்து கடித்த தெருநாய்… நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஆவணி 27, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள பழைய சாங்வி பகுதியில், தெருநாய் ஒன்று தாக்கியதில் தாயும் அவரது ஒரு வயது குழந்தையும் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது மடியில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த தெருநாய் அவர்களைப் பாய்ந்து கடித்துள்ளது.

இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த அப்பெண்ணின் பிடியிலிருந்து தவறி, கைகளில் இருந்த ஒரு வயது குழந்தை சாலையில் விழுந்தது. இந்த கோர விபத்தில் அக்குழந்தைக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

https://twitter.com/nextminutenews7/status/2092850167984906684/video/1

   

தொடர்ந்து அதிகரித்து வரும் இது போன்ற தெருநாய் தொல்லைகளால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வெளியே நடமாடுவதற்கே அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு தெருநாய்களைக் கட்டுப்படுத்த தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.