ஹரியானா மாநிலம் குருகிராமில், பரபரப்பான சாலை ஒன்றில் காதலி ஒருவர் தனது காதலனுடன் நடுத்தெருவில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்படி, அந்தப் பெண் பொதுவெளியில் இளைஞரை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி அநாகரீகமாக நடந்து கொண்ட போதிலும், அந்த இளைஞர் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருந்துள்ளார். சுற்றியிருந்தவர்கள் இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்தார்களே தவிர, யாரும் தலையிட்டுச் சமாதானம் செய்ய முன்வரவில்லை.
காவல்துறைக்குத் தகவல் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோ, உறவுகளில் ஏற்படும் மன ரீதியான துன்புறுத்தல் குறித்த விவாதத்தைப் கிளப்பியுள்ளது. ஒரு மென்மையான உறவில் கசப்புணர்வு ஏற்படும்போது, அது எப்படிப் பொதுவெளியில் ஒரு கேலிக்கூத்தாக மாறுகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த இந்த மோதல், தற்காலக் காதல் உறவுகளில் நிலவும் சகிப்புத்தன்மையற்ற போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
रिश्ते की एक नाजुक कड़ी होती है जब थोड़ा सा भी खटास आती है तो रिश्ते का तमाशा बनते देर नहीं लगती ।
ये एक मामला है हरियाणा के गुरुग्राम ।
एक वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है। वीडियो में एक व्यस्त सड़क पर एक महिला और उसके बॉयफ्रेंड के बीच बहस होती दिखाई दे रही है।… pic.twitter.com/12QKmlLbJq
— Madhuri Yadav (@Madhuyadav190) April 24, 2026
