கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வரும் ரஜிதா ரெட்டி (58) என்பவருக்கு ஸ்ரீஜா ரெட்டி என்ற 24 வயது மகள் ஒருவர் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும் நிலையில் ரஜிதாவின் கணவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர். நேற்று காலையில் அவர் வேலைக்கு சென்று விட்ட நிலையில் தாயும் மகளும் வீட்டில் இருந்த சமயத்தில் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் ஸ்ரீஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமையல் செய்துவிட்டு படுக்கையறைக்குச் சென்ற ரஜிதா தனது மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். உடனே கணவரை தொடர்பு கொண்டு மகள் தற்கொலை செய்து விட்டதாகவும் மகள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்றும் ரஜிதா கூறியுள்ளார்.
உடனே கணவர் வீட்டுக்கு திரும்பிய நிலையில் ரஜிதாவும் தூக்கில் பிணமாக தொங்கினார். தரையில் மகள் ஸ்ரீஜா உடல் இருந்ததும், ரஜிதாவின் கணவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகள் இறந்த துக்கத்தில் உடனே தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…