உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் இழிவாகப் பேசியதாகக் கூறி, தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும் தேசிய மகளிர் ஆணையத்திலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே முதல்வர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ-க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், எதிர்க்கட்சியினர் தொடுத்த இந்த அடுத்தடுத்த புகார்களின் அடிப்படையில் உதயநிதி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
