“கோடிகளை தூக்கி வீசிய விஜய்”…. நாளை வரப்போகும் அந்த ஒரு அறிவிப்பு…. தமிழ்நாடு வரலாற்றிலேயே இல்லாத புதிய மாடல்?…!

By Nanthini on ஆவணி 4, 2026

Spread the love

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சியில் அமர்ந்து 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அறிவிப்புகள் வரவில்லை என்றும், வாக்களித்த மக்களை தவெக அரசு ஏமாற்றி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இத்தகைய சூழலில், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தவெக அமைச்சரும், கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, வரவிருக்கும் பட்ஜெட் குறித்துப் பேசினார். வழக்கமாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்களைப் போலப் பழைய திட்டங்களையே கட்-அண்ட்-காப்பி செய்யாமல், இந்த பட்ஜெட் இதுவரை இல்லாத புதிய பார்வையில் இருக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார். ஒவ்வொரு துறையும் புதிய இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் வகையில் இது அமையும் என்றும், அறிவிக்கப்படும் ஒவ்வொரு திட்டமும் அடுத்த பட்ஜெட்டிற்குள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

   

மாநிலத்தின் தொழிலும், கட்டமைப்பும் வலுப்பெற சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தொழில் தொடங்குவதற்குத் தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான மாநிலம் என்று உறுதிபடத் தெரிவித்தார். குறிப்பாக, விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு மிகப்பெரிய மைல்கல்லை எட்டும் என்றும், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளையே நடத்தும் அளவிற்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்புகள் தமிழக நகரங்களில் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், சென்னை மற்றும் கோவையைத் தாண்டி தர்மபுரி, கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற பிற மாவட்ட பெண்களுக்கும் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் சிறப்புத் திட்டங்கள் வரவுள்ளதாகத் தெரிவித்தார்.

   

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “எங்கள் முதலமைச்சர் நாட்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர், அதைத் துறந்துவிட்டுத் தான் மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளார். விஜய்க்குப் பணம் ஒரு விஷயமே இல்லை. தேர்தலின் போது ஒரு பைசா கூட செலவு செய்யாமல், சாதி-மத பாகுபாடின்றி மக்களின் நம்பிக்கையைப் பெற்று நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்,” என்றார். மக்கள் முன்னேற்றத்தை நோக்கித் தவெக அரசு உறுதியாகப் பயணிக்கும் என்றும், தவறு செய்பவர்களை மக்களே தூக்கி எறிவார்கள் என்றும் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.