தமிழக பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், புதிய விண்ணப்பங்கள் எப்போது பெறப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்தத் தொகை உயர்வு அமலுக்கு வரும் பட்சத்தில், அது முதற்கட்டமாக தற்போது கணக்கில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கே முதலில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அல்லது பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள் மறுஆய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்றும், இந்த நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பிறகே புதிய பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் பணிகள் தொடங்கும் என்றும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
