தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அதிமுகவிற்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த அதிமுக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது. இதனால் தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக வெற்றி பெறுவதற்கான பல வியூகங்களை வகுத்து வருகின்றார். அதற்காக பல கட்சிகளிடமும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.
இதனிடையே நேற்று அதிமுக கூட்டணியில் யாரும் எதிர்பாராத விதமாக பாமக தரப்பில் அன்புமணி கூட்டணியை உறுதி செய்தார். இபிஎஸ்ஐ நேற்று நேரில் சந்தித்த அன்புமணி பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல கூட்டணி கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மேடையில் அதிமுக கூட்டணியில் NDA ஆட்சி அமைக்கும் என பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை குறிப்பிடாதது கவனம் பெற்றது. இதனால் தேர்தலுக்குப் பிறகு அதிமுக தலைமையை மாற்றும் திட்டம் பாஜகவிடம் இருக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார். இருந்தாலும் கூட்டணி சூழல் பாதிக்கப்படும் என்பதால் பாஜக இப்போது அதை வெளிப்படையாக சொல்லாது என்றும் அவர் கூறினார்.
ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா…
வேத ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், தற்போது தான் சஞ்சரித்து வரும் மிதுன ராசியில்…
"இன்னொரு ஆண் பிள்ளை வேண்டும்" என்ற ஆசையினால், 22 வயதே ஆன இளம் பெண் ஒருவர் தனது 8 வருட…