ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா (30) என்பவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை அன்று நிதேஷ் தனது மனைவியை அவரது தாய் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு சந்துப் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நிதேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காந்தாவின் தொண்டையை கொடூரமாக அறுத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த காந்தா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
https://twitter.com/i/status/2058425090002546701
மனைவியைக் கொலை செய்த அதிர்ச்சியில், நிதேஷ் அதே கத்தியால் தனது தொண்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்ட காவல்துறையினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சிவானா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் வண்டிப்பாளையம் பகுதியில், 11 வயது மதிக்கத்தக்க ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு…
தமிழ்நாட்டு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய கூட்டணிக் கணக்குகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வரவும் பாட்டாளி மக்கள் கட்சியை…
சமூக வலைதளங்களில் அவ்வப்போது மாணவர்களின் வினோதமான விடைத்தாள்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு மாணவனின் கணிதத் தேர்வு…
உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…
ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…