உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால் பரிதாபமாக உயிரிழந்தார். ஜலாலாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த குன்னோ என்ற அந்தச் சிறுமி, தனது வீட்டின் அருகே உள்ள மாந்தோப்பிற்குச் சென்றபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தோப்பில் தனியாக இருந்த சிறுமியை ஒரு கூட்டமாக வந்த தெருநாய்கள் திடீரென சூழ்ந்து கொண்டு ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கின. சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அருகிலிருந்த கிராம மக்கள் ஓடிவந்து நாய்களை விரட்டினர். ஆனால், அதற்குள் நாய்கள் சிறுமியைப் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கியிருந்தன.
படுகாயமடைந்த சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், தெருநாய்களின் அச்சுறுத்தல் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் வண்டிப்பாளையம் பகுதியில், 11 வயது மதிக்கத்தக்க ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு…
தமிழ்நாட்டு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய கூட்டணிக் கணக்குகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வரவும் பாட்டாளி மக்கள் கட்சியை…
சமூக வலைதளங்களில் அவ்வப்போது மாணவர்களின் வினோதமான விடைத்தாள்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு மாணவனின் கணிதத் தேர்வு…
உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…
ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…