விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் வண்டிப்பாளையம் பகுதியில், 11 வயது மதிக்கத்தக்க ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு வடை வாங்கிக் கொடுத்து, 62 வயது முதியவரான கன்னியப்பன் என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து ஓடி, வீட்டில் தன் தாயிடம் அழுதுகொண்டே நடந்ததைக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக முயன்ற முதியவர் கன்னியப்பனைப் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூர சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி தவெக தலைவர் விஜய், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது” என்று விமர்சித்துள்ளார். மேலும், “தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?” என்று கேள்வி எழுப்பியதோடு, குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இச்சம்பவத்திற்குத் தனது கடுமையான கண்டனத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். குழந்தை என்றும் பாராமல் இத்தகைய செயல்களில் மனித மிருகங்கள் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது என்று கூறியுள்ள அவர், கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பதட்டம் விலகுவதற்குள் அடுத்த கொடூரம் நடந்துள்ளது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அரசு கூடுதல் கவனமும், அக்கறையும் காட்ட வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…
பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது விவசாயி அந்தோணி ராஜ், தனது வீட்டின்…
ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி, சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து…
வெப்ப அலை மற்றும் கடுமையான கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது குறித்து அரசு பரிசீலிப்பது மிகவும் வரவேற்கத்தக்க,…
கோயம்புத்தூர் பாரதிபுரம் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும்…