சமூக வலைதளங்களில் அவ்வப்போது மாணவர்களின் வினோதமான விடைத்தாள்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு மாணவனின் கணிதத் தேர்வு விடைத்தாள் இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த மாணவன் கணிதக் கேள்விகளுக்குப் பதில்களைக் கணக்கிட்டு எழுதுவதற்குப் பதிலாக, முழு விடைத்தாளையும் உருவகக் கவிதைகளாலும் காதல் வரிகளாலும் நிரப்பியுள்ளார்.
அந்த விடைத்தாளில் மாணவன், “கணிதம் மிகவும் கடினமான பாடம், என்னுடைய விதியை மாற்றியமைக்க ஆசிரியரே உங்களால் தான் முடியும்” என்ற பொருள்படும்படி உருக்கமாக எழுதியுள்ளார். மேலும், “நான் கடினமாகப் படித்தாலும் எனக்குக் கணிதம் புரியவில்லை, என்னை எப்படியாவது தேர்ச்சி பெறச் செய்யுங்கள்” என்று கவிதையாக வடித்திருந்தார். இதைப்பார்த்த ஆசிரியர் அதிர்ச்சியடைந்தாலும், மாணவனின் இந்தச் செயலைப் பாராட்டி விடைத்தாளைத் திருத்தி 100-க்கு ‘பூஜ்யம்’ (0) மதிப்பெண் வழங்கி, “மிக அருமையான ஷாயரி” என்று சிவப்புப் பேனாவால் குறிப்பு எழுதியுள்ளார்
https://www.instagram.com/reel/DYjpl4vvTYT/?utm_source=ig_web_copy_link
ஆசிரியர் இந்த விடைத்தாளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது காட்டுத்தீ போல் பரவியது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலவிதமான வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர், “மாணவனின் திறமை கணிதத்தில் இல்லை, கவிதையில் உள்ளது” என்று பாராட்டினாலும், பலர் “தேர்வில் இப்படிப் பொறுப்பற்ற முறையில் செயல்படுவது தவறு” என்றும், “ஆசிரியர் அதற்குத் தகுந்த மதிப்பெண்ணையே வழங்கியுள்ளார்” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…