உத்தரப் பிரதேச மாநிலம் சந்த் கபீர் நகரைச் சேர்ந்த புத்தி ராம், 21 ஆண்டுகளுக்கு முன்பு குஷி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 18 வயதில் மூத்த மகன் உட்பட 5 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், குஷிக்கு தனது சொந்த ஊரைச் சேர்ந்த அவதேஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இந்த காதல் விவகாரம் தீவிரமடைந்து, அவதேஷ் பெரும்பாலான நேரத்தை குஷியின் வீட்டிலேயே செலவிடத் தொடங்கினார்.
மனைவியின் இந்த தவறான உறவைக் கண்டு அதிர்ச்சியடைந்த புத்தி ராம், அவர்களைப் பிரிக்க முயன்றார். ஆனால், குஷியோ கணவனுக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். தன்னைத் தடுக்க முயன்றால் புத்தி ராமைத் துண்டு துண்டாக வெட்டி மிக்சியில் அரைத்து விடுவதாக அச்சுறுத்தினார். இதனால் உயிருக்குப் பயந்த புத்தி ராம், மனைவியுடன் மோதலில் ஈடுபடாமல் மிகவும் சாதுரியமாகச் செயல்படத் தீர்மானித்தார்.
https://twitter.com/hindipatrakar/status/2084951357698797979/video/1
தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணிய புத்தி ராம், மனைவியையும் அவளது காதலனையும் நேராகக் கோயிலுக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் குஷிக்கு புதிய கணவரும், குழந்தைகளுக்கு புதிய அப்பாவும் கிடைத்த மகிழ்ச்சி என்றால், புத்தி ராமுக்கு தன் உயிர் தப்பியதே பெரும் மகிழ்ச்சியாக அமைந்தது. அவதேஷ் குஷியின் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது, புத்தி ராம் புன்னகையுடன் அதனைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் நோந்தாபுரி மாகாணத்திலுள்ள டெப்சிரின் நோந்தாபுரி உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், பலர்…
மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள அ.புதுப்பட்டியில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளங்கோவன் என்பவரின் மனைவி கலைச்செல்வி, குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற…
தொகுதி சீரமைப்புத் தொடர்பாக ஆலோசிப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் நாளை (ஆகஸ்ட் 8) நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு…
மதுரை மாநகரில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள மூன்று கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. குற்றங்களைத் தடுக்கும்…
காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனது உரிமைகளைச் சிறிதும் விட்டுக்கொடுக்காது எனத் தெளிவுபடுத்தியுள்ள…
திமுகவின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராகவும், முன்னாள் அமைச்சராகவும் திகழ்ந்த சேகர்பாபு, சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடும் அரசியல் நெருக்கடியை…