“ஓட ஓட விரட்டி வெட்டு!” – 48 மணி நேரத்தில் நடந்த 3 பகீர் சம்பவங்கள்…மதுரையை உலுக்கும் தொடர் படுகொலைகள்…!!

Spread the love

மதுரை மாநகரில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள மூன்று கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் வாகனத் தணிக்கை மற்றும் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியிருந்த போதிலும், குறுகிய கால இடைவெளியில் நடந்தேறியுள்ள இந்தத் தொடர் கொலைகள் சட்டம் ஒழுங்கு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளன.

சோலையழகுபுரம் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான மணி, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அவரது நண்பர் திவாகரால் வெட்டிக் கொல்லப்பட்டார். மற்றொரு சம்பவத்தில், நீதிமன்ற விசாரணை முடிந்து திரும்பிய சிந்தாமணியைச் சேர்ந்த முருகன் என்பவரை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்துள்ளது. இது தவிர, கூடல்புதூர் பகுதியில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த ஷிரிப்பிக்ராஜன் என்ற இளைஞர், பணப் பரிவர்த்தனை தொடர்பான வாக்குவாதத்தில் நண்பர்களாலேயே கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

மதுபோதையில் ஏற்பட்ட மோதல்களாலும், முன்விரோதத்தின் காரணமாகவும் இந்த உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளதால், காவல் துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரவு நேர ரோந்துப் பணிகளைப் பன்மடங்கு அதிகப்படுத்த வேண்டும் எனவும், குற்றப் பின்னணி கொண்டவர்களைத் தீவிரமாகக் கண்காணித்துத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் வலுவான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Gayathri

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

6 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago