அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… ரோட்டில் பெற்ற மகனையே… கொடூரமாக தாக்கிய தந்தை… கதறிய குழந்தை… கொந்தளித்த நெட்டிசென்கள்…!

Spread the love

குடிமல்காப்பூர் பிவிஎன்ஆர் விரைவுச் சாலையின் தூண் எண் 104 அருகே, குடும்பத் தகராறு காரணமாக சல்மான் (25) என்பவர் தனது நான்கு வயது மகன் அர்மானை எந்தக் காரணமும் இன்றி கொடூரமாகத் தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த தந்தை, சிறுவனின் தலையைச் சாலையோரத் தூணில் பலமாக மோதி, உயரே தூக்கித் தரையில் வீசியதுடன், அவ்வழியே வந்த லாரியின் அடியில் வீசவும் முயன்றுள்ளார். இந்தத் கொடூரமான தாக்குதலில் பலத்த காயமடைந்த சிறுவனை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அச்சிறுவனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இச்சம்பவம் குறித்து காலை 7:29 மணிக்கே ‘டயல் 100’ மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், காவல் நிலையம் சம்பவ இடத்திலிருந்து வெறும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் அதிகாரிகள் காலை 8:35 மணிக்கு, அதாவது ஒரு மணி நேரம் தாமதமாகவே வந்து சேர்ந்துள்ளனர். இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடக்கும் போது காவல்துறை அலட்சியமாகச் செயல்பட்டுத் தாமதமாக வந்ததாகக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினர் மீது கடும் ஆத்திரமும் கொந்தளிப்பும் அடைந்தனர்.

சிறுவன் அர்மானைக் கொடூரமாகத் தாக்கி அவனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய தந்தை சல்மானைப் பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்துப் பிணைத்தனர். பின்னர், தாமதமாகச் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் குற்றவாளிய ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சல்மானைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Swetha

Recent Posts

“என்ன விட்டுரு… ப்ளீஸ்…” கெஞ்சிய 17 வயது மாணவி…. கழுத்தறுத்து கொன்று அருகிலேயே கிடந்த காதலன்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பிசிஏ முதலாண்டு படித்து வந்த ஸ்மிருதி பாண்டே என்ற 17 வயது கல்லூரி மாணவி, தனது…

6 minutes ago

“மாதவிடாய் நேரத்திலும் விடல…. ஏன் இன்னும் கைது பண்ணல”…. “விஜய் அண்ணனை நம்பிதான் வாக்களித்தோம்… ஆனால்?”…. தற்கொலை மிரட்டல் விடுத்த பாதிக்கப்பட்ட பெண்….!

தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டு வந்த விஜய் மோகன் மீது, அதே கட்சியைச் சேர்ந்த…

11 minutes ago

“பேப்பர் படிச்சிருந்தா தெரியும்”…. உதயநிதிக்கு செக் வைத்த விஜய்… சட்டசபையில் சட்டென பதிலடி கொடுத்த DMK… காரசார விவாதம்….!

தமிழக சட்டசபையில் தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5 அன்று…

28 minutes ago

“திமுகவில் இருந்து தவெக-வுக்கு ரூட்?”…. அதிரவைத்த ‘உள்ளடி’ மேட்டர்…. தோப்பு வெங்கடாசலம் பதவி பறிக்கப்பட்ட பின்னணி இதுதானா….?

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் கட்சிப் பதவி திமுகவில் பறிக்கப்பட்டதற்குப் பின்னால், ஈரோடு அரசியலில் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக…

37 minutes ago

விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு….. “இன்றே தீர்ப்பு வேண்டும்”…. லண்டனில் இருந்து களமிறங்கிய சங்கீதா தரப்பு…. பிற்பகலில் வரப்போகும் முக்கிய உத்தரவு…!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து மனு மீதான விசாரணை, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில்…

41 minutes ago

டாஸ்மாக் பிரியர்களே உஷார்!… பாட்டில் விலை உயருகிறதா?… நிதிச் செயலாளர் கொடுத்த ஷாக் நியூஸ்…!!

தமிழக நிதித்துறை செயலாளர் சித்திக், டாஸ்மாக் மதுபான விற்பனை மற்றும் வரி மூலமாக கடந்த ஆண்டு ரூ.51 ஆயிரம் கோடி…

54 minutes ago