உச்சகட்ட கொடூரம்… மனைவியைக் கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவன்… 2 மாதத்திற்குப் பிறகு வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

By Nanthini on ஐப்பசி 21, 2025

Spread the love

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏலாப்பூர் அருகே உள்ள துரா பள்ளம் கிராமத்தை சேர்ந்த பெயிண்டர் ஆன சிலம்பரசன் என்பவருடைய மனைவி பிரியா (26). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. இதனிடையே பிரியாவின் நடத்தையில் சிலம்பரசனுக்கு சந்தேகம் வந்ததால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடையும் பிரியா அடிக்கடி பெரியபாளையம் அடுத்த ஆரணி அருகே உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு செல்வதும் பிறகு சமாதானம் அடைந்து கணவர் வீட்டுக்கு வந்து குடும்பம் நடத்துவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக பிரியா தன் பெற்றோருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார்.

இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்பு பிரியாவின் தந்தை சீனிவாசன் மகளை பார்ப்பதற்காக துரா பள்ளம் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மகள் அங்கு இல்லாததால் மருமகனிடம் கேட்டபோது பிரியா வெளியில் சென்று விட்டதாக கூறி சமாளித்துள்ளார். மேலும் பேரன்களும் தனது தாய்க்கிழந்த இரண்டு மாதமாக வீட்டில் இல்லை என்று தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த சீனிவாசன் தன்மகள் பிரியா மாயமானது குறித்து உடனே போலீசீர் புகார் அளித்தார்.

   

இதனை தொடர்ந்து போலீசார் சிலம்பரசனை கைது செய்த விசாரணை நடத்தியது கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி இரவு மனைவி பிரியாவுடன் ஏற்பட்ட தகராறு அவரது கழுத்தை நெரித்து கொன்று விட்டதாக தெரிவித்தார். மேலும் உடலை டிரம்மில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 7 கண் பாலத்தை ஒட்டிய சுடுகாட்டினருகே புதைத்து விட்டதாக கூறினார்.

   

இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்பே தன் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து புதைத்து விட்டு எதுவும் தெரியாதது போல் சகஜமாக சிலம்பரசன் இருந்து வந்துள்ளார். இந்த சம்பவம் போலிசையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.