தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக முதல்வர் ஸ்டாலினின் தென்காசி பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகளை வழங்க அக்டோபர் 24ஆம் தேதி அன்று முதல்வர் தென்காசி செல்வதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அவரது பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவரது பயணம் குறித்த புதிய தேதி விரைவில் வெளியாக உள்ளது. மழைக்கால பணிகளை முதல்வர் ஸ்டாலின் முடுக்கி விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
