“மனைவி எங்கேன்னு கேட்டா சிரிச்சாரு”… நெடுஞ்சாலைக்கு அடியில் 30 அடி ஆழத்தில் தோண்டியபோது அதிர்ந்த போலீசார்…. ஒரு மாதமாக கணவன் மூடி மறைத்த அந்த ரகசியம்….!

Spread the love

திண்டுக்கல் அருகே மனைவி மாயமானதாகக் நாடகமாடிய கணவர், அவரைக் கொலை செய்து உடலைப் புதைத்ததாகக் காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் இரண்டெல்லைப்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான லாரன்ஸ் (36) என்பவருக்கும், அவரது மனைவி கவுசல்யா (32) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் கவுசல்யா திடீரென மாயமானார். மகனைக் காணாததால் சந்தேகமடைந்த கவுசல்யாவின் பெற்றோர், திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, லாரன்ஸிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கவுசல்யாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கல்நூத்தாம்பட்டி அருகே கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை லாரன்ஸ் ஒப்புக்கொண்டார். மேலும், அப்பகுதியில் நடைபெற்று வரும் ரிங் ரோடு நெடுஞ்சாலைப் பணிக்காகக் கொட்டப்பட்டிருந்த மணல் குவியலில் உடலைக் குழிதோண்டிப் புதைத்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார். இந்த அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து, தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியைத் தொடங்கினர்.

உடல் புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்தில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வந்ததால், பொக்லைன் இயந்திரம் கொண்டு தோண்டும் பணி சவாலாக அமைந்தது. தொடர்ந்து 3 நாட்களாக சுமார் 30 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட நிலையில், பெண்ணின் கை எலும்புத் துண்டுகள் மற்றும் சேலை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. திண்டுக்கல் கோட்டாட்சியர் பழனிவேல் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் அந்த எலும்பு மற்றும் சேலையைக் கைப்பற்றி டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே, கவுசல்யா மாயமான வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய திண்டுக்கல் தாலுகா போலீசார், லாரன்ஸைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்பு மற்றும் உடைகள் கவுசல்யாவுடையதுதானா என்பது டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே அதிகாரப்பூர்வமாக உறுதியாகும் என்றபோதிலும், இக்கொடூரச் சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னது இது?… ரயிலில் பயணியின் உணவில்… கிடந்த உலோகத் துண்டு… ஊழியர் கொடுத்த விளக்கம்… IRCTC-யின் அதிரடி ஆக்‌ஷன்…!

குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…

4 minutes ago

திக் திக் நிமிடங்கள்… எதுவுமே வேலை செய்யல?… ரயில் விபத்திற்கு நொடிக்கு முன் இன்ஜின் அறையில்… ஓட்டுநர் கதறிய பகீர் வீடியோ… இணையத்தில் வைரல்…!

அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…

15 minutes ago

அதிர்ச்சி… 150 கோடியை நெருங்கும் இந்திய மக்கள் தொகை… வைரலாகும் டெல்லி AIIMS டிஜிட்டல் பலகை…!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

28 minutes ago

காரை நிறுத்தச் சொன்ன காவலரை 200 மீட்டர் தூரம் பறக்கவிட்ட ஓட்டுநர்….. மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…

35 minutes ago

“ஐயோ சாவு இப்படியா வரணும்?”…. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்த நாட்டிய கனவு… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஷாக்கிங் வீடியோ….!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…

39 minutes ago

ஐயோ கடவுளே… 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை… அதிர்ச்சி பின்னணி என்ன?… கொந்தளிப்பில் கிராம மக்கள்…!

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டம், கரோத் தாலுகாவில் உள்ள லுக்கா கிராமத்தில் ஏழு வயது சிறுமி ஒருவர் பாலியல்…

39 minutes ago