கணவனைப் பிரிந்து, முகவரி மறந்து, பெயர் கூட நினைவில்லாமல் அந்நியக் கிராமத்தின் வீதியில் உணவிற்காகக் கையேந்தி நின்ற மனைவியின் நிலை எவரையும் கலங்கச் செய்யும். தன் துணைவியைக் காணாமல் மூன்று மாதங்களாகத் தவித்து வந்த கணவனுக்கு, ஃபேஸ்புக் பக்கத்தில் இரபியுல் என்ற வீடியோ படைப்பாளர் பதிவிட்ட ஒரு காணொளி தேடுதல் வேட்டையின் திருப்புமுனையாக அமைந்தது.
அந்தக் காணொளியைக் கண்டு ஓடிவந்த கணவனைக் கண்டதும், மனநலப் பாதிப்பால் தன் சுயநினைவை இழந்திருந்த அந்தப் பெண்மணி, நொடிப்பொழுதில் தன் கணவனை அடையாளம் கண்டுகொண்டார். தன் மனைவியைக் கண்டதும் அந்தக் கணவன் கதறி அழுத கண்ணீரைக் கண்டு, அங்கிருந்த மக்கள் பலரும் அப்பெண்ணை அவருடைய தாய் என்றே தவறாகக் கருதும் அளவுக்கு அவனது பாசம் எல்லையற்றுப் பெருகியோடியது.
https://twitter.com/diol2n/status/2105595041976668419/video/1
மூன்று மாதங்கள் கடந்த பின்னரும், தன் அன்பிற்குரியவள் நிச்சயம் கிடைப்பாள் என்ற நம்பிக்கையைத் தளரவிடாமல் தேடி அலலைந்த அக்கணவனின் விசுவாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. சுயநினைவற்ற நிலையிலும் துணையை மறக்காத மனைவியின் அன்பும், மனைவியை விட்டுக்கொடுக்காத கணவனின் தேடலும் உண்மையான அன்பு காலத்தைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்பதற்கு ஒரு சிறந்த சான்றாகும்.
