“காலில் மிதித்ததால் வெடித்த மோதல்…” வாலிபரை சரமாரியாக வெட்டி கொன்ற கும்பல்… விநாயகர் ஊர்வலத்தில் பயங்கரம்…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 1, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு பீனியா அருகே உள்ள சொக்கசந்திரா கிராமத்தில், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 27 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பன்னேர்கட்டா பகுதியைச் சேர்ந்த தீபக் (27) என்பவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து நந்தினி லேஅவுட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையைச் சொக்கசந்திரா ஏரியில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளார். சிலையை நீர்நிலைகளில் கரைத்துவிட்டுத் திரும்பும்போது, எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் காலில் தீபக் தற்செயலாக மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்து, ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் நிலைக்குச் சென்றது.

   

இந்த மோதலின் போது, சுமந்த் என்பவன் தலைமையிலான 10 பேருக்கும் மேற்பட்ட கொடூர கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் தீபக்கைச் சரமாரியாகக் குத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபக், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகப் பீனியா காவல்துறையினர் 6 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதோடு, தப்பியோடிய மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.