“இவரை ஏன் அப்படி கொன்னாங்க?”… கிரிக்கெட் மட்டையால் மண்டை உடைப்பு… நள்ளிரவில் வீசப்பட்ட சடலம்… நெஞ்சை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

By Gayathri on ஐப்பசி 1, 2026

Spread the love

ஐதராபாத் நர்சிங்கி காவல் எல்லைக்குட்பட்ட கோகாபேட் பகுதியில் அமைந்துள்ள ‘நியோ போலீஸ் குருமா சங்கம்’ கட்டடத்தின் அருகே, இளைஞர் ஒருவரின் சடலம் கொடூரமான முறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட நபர் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கண்ணா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த இவருக்கு, மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

தலையில் கிரிக்கெட் மட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வேறெங்கோ வைத்து கொலை செய்துவிட்டு, சடலத்தை மட்டும் குற்றவாளிகள் இங்கு வீசிச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் பலமாக சந்தேகிக்கின்றனர். இந்த கொடூர சம்பவம் குறித்து தகவலறிந்த டிசிபி சிந்தாமணி ஸ்ரீனிவாஸ் நேரில் ஆய்வு செய்த நிலையில், இந்த கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.