கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா அருகேயுள்ள புதன்பள்ளிக்குன்னு வாழையிலை பகுதியைச் சேர்ந்தவர் குரியன் ஜோசப் (73). தொழிலதிபரான இவர், தனது மனைவி ஷெர்லியுடன் இணைந்து வாழ்ந்து வந்தார். இந்த தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக குரியன் ஜோசப் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இச்செய்தி அவரது குடும்பத்தினரையும், உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
உயிரிழந்த குரியன் ஜோசப்பின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அவரது உடல் பெட்டியில் வைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. பின்னர், உடலை மூடி தேவாலயத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. அந்தத் தருணத்தில், கணவரின் உடலைப் பிரிந்து செல்ல மனமில்லாத மனைவி ஷெர்லி, பெட்டியில் இருந்த கணவரின் உடலுக்குக் கண்ணீருடன் இறுதி முத்தமிட்டார்.
கணவருக்கு முத்தமிட்ட அடுத்த சில நொடிகளிலேயே, தாங்க முடியாத துயரத்தால் ஷெர்லி திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டுப் பரிசோதித்தபோது, அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. வாழ்வில் மட்டுமல்லாமல் சாவிலும் பிரியாத இந்தத் தம்பதியின் நெகிழ்ச்சியான மற்றும் சோகமான சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் தலேகான் தாடே பகுதியில் உள்ள சிவாஜி சௌக் அருகில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம்…
திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர்…
தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நடிகர் ஆர். சரத்குமாரின் பெயர் தீவிர பரிசீலனையில் இருப்பதாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
தைவானில் உள்ள ஒரு வித்தியாசமான உணவகத்தில் கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் Aakanksha…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, உள்ளாட்சி நிர்வாகத்தைச் சீராக நடத்தும் பொருட்டு அடுத்த 6 மாதங்களுக்கு அதிகாரிகளைத்…
தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவின் கைது மற்றும் திமுக கவுன்சிலரின் அவதூறு பேச்சு குறித்து கனிமொழி…