தைவானில் உள்ள ஒரு வித்தியாசமான உணவகத்தில் கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் Aakanksha Monga தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலகிலேயே விசித்திரமான உணவகங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த இடத்திற்குச் செல்ல பலரும் தயங்கினாலும், இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. வழக்கமான இருக்கைகளுக்குப் பதிலாக உண்மையான டாய்லெட் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த உணவகத்தில், மேசைகள் மற்றும் சுவர்கள் மலத்தின் வடிவத்திலான அலங்காரங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இங்கு பானங்கள் சிறுநீர் கழிப்பிட வடிவ பாத்திரங்களிலும், உணவு சிறிய டாய்லெட் கிண்ணங்களிலும் பரிமாறப்படுகின்றன. மேலும், இந்த உணவகத்தின் மெனுவில் ‘டாய்லெட் ஹாட் பாட்’ மற்றும் ‘பூப் கறி’ போன்ற பல விசித்திர உணவுகள் இடம்பெற்றுள்ளன. உணவின் சுவைக்கு 10-க்கு 5 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கிய அவர், இந்த வித்தியாசமான அனுபவத்திற்கு 10-க்கு முழு மதிப்பெண்கள் அளித்துள்ளார். குறிப்பாக, பார்ப்பதற்கு அச்சு அசலாக மலம் போன்றே பரிமாறப்பட்ட சாக்லேட் ஐஸ்கிரீமைக் கண்டதும், இனி தன்னால் டார்க் சாக்லேட் ஐஸ்கிரீமை முன்போல பார்க்கவே முடியாது என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
தைவான் இதுபோன்ற விசித்திரமான தீம் உணவகங்களின் தலைநகரமாக மாறிவருவதாகத் தெரிவித்துள்ள அவர், தற்போது இதன் இரண்டு கிளைகள் தைபேயின் ஜிமென் மற்றும் ஷிலின் எம்.ஆர்.டி நிலையங்களுக்கு அருகில் இயங்கி வருவதாகக் கூறியுள்ளார். விடுமுறை நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து செல்வது நல்லது என்றும் அவர் தனது பதிவில் அறிவுறுத்தியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் பாங்குரா மாவட்டம் சோனாமுகி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் தனது மனைவியைத் தலை துண்டித்துக்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் தலேகான் தாடே பகுதியில் உள்ள சிவாஜி சௌக் அருகில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம்…
திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர்…
தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நடிகர் ஆர். சரத்குமாரின் பெயர் தீவிர பரிசீலனையில் இருப்பதாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, உள்ளாட்சி நிர்வாகத்தைச் சீராக நடத்தும் பொருட்டு அடுத்த 6 மாதங்களுக்கு அதிகாரிகளைத்…
தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவின் கைது மற்றும் திமுக கவுன்சிலரின் அவதூறு பேச்சு குறித்து கனிமொழி…