“ஐயோ என் புருஷன் செத்துட்டான்”… இறுதி சடங்கு செய்து உடலை புதைத்த மனைவி… இஸ்ரேலில் இருந்து வந்த போன் கால்… வெளியான திடுக்கிடும் உண்மை…!

Spread the love

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் ரமேஷ் என்பவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அதே பகுதியை சேர்ந்த சௌமியா என்பவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரமேஷ் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். இதனால் அதிகாலையிலேயே அவருடைய மனைவியை அவசர அவசரமாக இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் ரமேஷின் உடலை பார்த்தபோது அவருடைய கழுத்தில் காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இஸ்ரேலில் இருக்கும் ரமேஷின் சகோதரருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நிஜாமாபாத் காவல் நிலையத்திற்கு போன் செய்து தன்னுடைய அண்ணன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவர் புகார் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு போலீசார் செல்வதற்கு முன்பாக சௌமியா கணவனின் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு அவரது சடலத்தை புதைத்து விட்டார்.

எனவே போலீசார் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. அதாவது மட்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த சௌமியாவுக்கு அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த 25 வயது திலீப் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் நெருங்கி பழகிய நிலையில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனை அறிந்த ரமேஷ் மனைவி மற்றும் அவருடைய காதலனை கண்டித்ததால் ஆத்திரமடைந்த சௌமியா மற்றும் அவரது காதலன் இருவரும் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய திட்டம் தீட்டி சௌமியா தனது மோதிரத்தை விற்று திலீபிடம் 35 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை ரமேஷை கொலை செய்வதற்காக திலீப் கூடி படைக்கு கொடுத்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரமேஷ் வேலைக்கு சென்ற நிலையில் சௌமியா தனது காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். ஆனால் ஏற்கனவே மனைவி மீது சந்தேகத்தில் இருந்த ரமேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டுக்கு அருகே மறைந்திருந்து பார்த்தபோது திலீப் வீட்டுக்கு வருவதை கண்டு ஆத்திரம் அடைந்தார்.

பின்னர் வீட்டுக்குச் சென்ற ரமேஷ் அவர்களிடம் வாக்குவாதம் செய்த போது ஆத்திரமடைந்த சௌமியா அவரது காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பிறகு காதலனை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு கணவன் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறி நாடகமாடி இறுதி சடங்குகளை ஏற்பாடு செய்தது தெரியவந்துள்ளது. தற்போது இந்த கொலை வழக்கில் சௌமியா உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

Nanthini

Recent Posts

“மந்திரி பதவி தராட்டி நாங்க இல்ல!”.. பாஜக கூட்டணியை உடைக்க துணியும் ராமதாஸ்?.. அதிரும் அரசியல் காலம்..!!!

தமிழ்நாட்டு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய கூட்டணிக் கணக்குகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வரவும் பாட்டாளி மக்கள் கட்சியை…

41 seconds ago

சார், என்னை பாஸ் பண்ணிடுங்க..! மேத்ஸ் எக்ஸாமில் காதல் கவிதை எழுதிய மாணவன்.. ஆசிரியரின் மரண மாஸ் பதில்…!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது மாணவர்களின் வினோதமான விடைத்தாள்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு மாணவனின் கணிதத் தேர்வு…

1 minute ago

இதுக்குத்தான் படிச்சீங்களா..? முசோரியில் ஓடும் காரில் இருந்து குப்பை போட்ட சுற்றுலாப் பயணிகள்.. வீசப்பட்ட குப்பையை அள்ளி.. அவர்களிடமே கொடுத்த நெட்டிசன்..!

உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…

10 minutes ago

ஜெய்ப்பூரில் பயங்கரம்: மனைவியை தாக்கி, எச்சில் துப்பிய கணவன்… அடுத்த சில மணி நேரங்களில் நேர்ந்த கொடூரம்..வைரலாகும் CCTV வீடியோ…!

ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…

28 minutes ago

பகீர்.. மாந்தோப்பிற்கு சென்ற 11 வயது சிறுமியை.. கடித்துக் குதறிய தெருநாய்கள்.. நெஞ்சை உலுக்கும் சோகம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…

35 minutes ago

அதிமுகவில் அடுத்த ட்விஸ்ட்… EPS காலில் விழுகிறாரா வேலுமணி?… இன்று நடக்கும் ரகசிய பேரம்… காலையிலேயே உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்…!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…

41 minutes ago