நாகர்கோவில் கோட்டார் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பிரபா . 36 வயதான இவர் நாகர்கோவில் கூடுதல் மகிளா கோர்ட்டி மனு அளித்துள்ளார். அதில், “கடந்த 2007 ஆம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். என்னுடைய கணவருக்கும், நகைக்கடையில் வேலை பார்த்து வந்த பெண் ஒருவருக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடைய தூண்டலின் பெயரில் என்னுடைய கணவர் தகாத வார்த்தையால் என்னை திட்டி கொடுமைப்படுத்துகிறார்.
அதோடு என் கணவரும், அந்த பெண்ணும் சட்டவிரோதமாக கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனால் நான் நிற்கதியாக நிற்கிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகளிர் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பெயரில் மகளிர் காவல்துறையினர் பிரபாவின் கணவர் உமாசங்கர் மற்றும் அவருடைய கள்ளக் காதலி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
