ரூ.1000 முதல் ரூ.30 லட்சம் வரை… தமிழக மக்களுக்கு அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on ஆவணி 4, 2025

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்காலம் இன்னும் ஓராண்டில் முடிவுக்கு வரவுள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது மீண்டும் தங்கள் ஆட்சியை தமிழகத்தில் தக்க வைப்பதற்காக ஸ்டாலின் புதுவிதமான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அதன்படி தமிழகத்தில் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வரும் நிலையில் இந்தத் திட்டத்தில் அனைத்து விதமான சேவைகளும் வழங்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றது.

இப்படியான நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக அரசால் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய், தமிழ் புதல்வன், தமிழ் புதல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய், முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மனுக்களை முதல்வருக்கு அனுப்பினால் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 30 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.