அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி பேசியதாவது, “2016 ஆம் வருடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் முதல்வராக இருந்து வந்தார். அப்போது சசிகலாவின் பதவி வெறி மற்றும் சுயநலத்தால் கட்சிக்குள் கலவரம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தர்ம யுத்தத்தில் ஈடுபட்டால் அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது ஓபிஎஸ் திமுகவோடு இணைந்து அவருடைய ஆட்சியை கலைக்க முயன்றார். இந்த விவகாரத்தில் மோடி தலையிட்டதையடுத்து எடப்பாடி முதல்வராகவும் ஓபிஎஸ் துணை முதல்வராகவும் இணைந்து செயல்படுவதாக தெரிவித்தார்கள்.
இதனிடையே ஓபிஎஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அதிமுக வாக்கு வங்கியை இழந்து வருகிறது. கடந்த 2016 ஆம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 45 சதவீதம் வாக்குகள் கூட பெறவில்லை. ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்குவது தமிழக மக்களின், அதிமுக தொண்டர்களுடைய எதிர்பார்ப்பாகவே இருக்கிறது. பாஜக மீதான எதிர்பார்ப்பில் ஓபிஎஸ் எந்த அளவிற்கு உறுதியாக இருப்பார் என்பதை யூகிக்க முடியாது.
அடுத்த நிமிடமே பிரதமரோ அமைச்சரோ உத்தரவிட்டால் ஓபிஎஸ் உடனே டெல்லிக்கு காவடி தூக்கி ஓடி விடுவார். ஓபிஎஸ் முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்தது எதிர்பாராமல் நடந்தது கிடையாது. மொத்தத்தில் நன்றாக இருந்த அதிமுகவை எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா , டிடிவி தினகரன் ஆகிய நான்கு பேரும் நாசமாக்கி விட்டார்கள். என்னைப்போல எம் ஜி ஆர் கால விசுவாசிகள் கண்ணீர் வடிக்கும் நிலை உள்ளது என்று கூறியுள்ளார்.
