கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், அம்மாபேட்டை, கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அந்தவகையில் திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றிரவு தென்காசி, சென்னை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
