தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையாகும். அதனைப் போலவே ஆகஸ்ட் 7 நாளை மறுநாள் சங்கர நாராயணர் கோவில் ஆடித்த பசு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
