சீனாவை சேர்ந்தவர் சியான்சியான். இவர் இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் வாங்கிய சம்பளம் குறைந்துவிட்டதால், மனைவி தன்னை விவாகரத்து செய்ததாக உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், “ஒருகாலத்தில் நானா மாதம் ரூ.6.23 லட்சம் சம்பாதித்தேன். என் மனைவிக்காக அந்த பணத்தை செலவழித்தேன்.
இந்நிலையில் திடீரென அந்த வேலையை இழந்ததால், உணவு டெலிவரி வேலை செய்துவருகிறேன். வருமானம் குறைந்ததும், என்னுடைய மனைவி விவாகரத்து கோரினார். அப்போது தான் ‘அவர் என்னைக் காதலிக்கவில்லை, வசதிக்காக மட்டுமே என்னை தேர்வு செய்தார்’ என்ற உண்மை எனக்கு தெரிந்தது” என குறிப்பிட்டுள்ளார்.
