தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இதனால், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நாளை 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், விழுப்புரத்திலும், நாளை மறுநாள் தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
