இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பைப் பார்த்து தேசிய விருதுக்கு தகுதியானவர் என்று பாராட்டியுள்ளார். ராஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தி கேர்ள் பிரண்ட்’. இந்த படத்தை மனம் திறந்து பாராட்டிய தேவி ஸ்ரீ பிரசாத், “ராஷ்மிகா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தில் ராஷ்மிகா தன்னுடைய அப்பாவித்தனத்தை முகத்தில் காட்டி ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இந்தப் படத்தை ஒவ்வொருவரும் கட்டாயமாக பார்க்க வேண்டும் என்றார்.
