“10 நிமிஷம் தான் லேட்…” பையுடன் 100 தோப்புக்கரணம் போட்ட 12 வயது சிறுமி… ஆசிரியரால் நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

By Devi Ramu on கார்த்திகை 16, 2025

Spread the love

மகாராஷ்டிர மாநிலம், வசாய் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்புப் படித்து வந்த 12 வயது சிறுமி காஜல் கோண்ட் நேற்று முன்தினம் பள்ளிக்கு வெறும் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக, அவரது ஆசிரியர் தோளில் புத்தகப் பையைச் சுமந்தவாறு 100 முறை தோப்புக் கரணம் போடுமாறு தண்டனை வழங்கியுள்ளார். இந்த தண்டனையை நிறைவேற்றிய சிறிது நேரத்திலேயே சிறுமிக்குக் கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

வலி காரணமாகச் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால், முதலில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். குழந்தைகள் தினத்தை ஒட்டி நடந்த இந்தத் துயரச் சம்பவம், பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.