மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்காக அவரது சொந்தத் தங்கையையே இரண்டாவது மனைவி எனச் சித்தரித்து நீதிமன்றத்தை ஏமாற்றிய பெண்ணின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1998-இல் திருமணமான இந்தத் தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்த நிலையில், எப்படியாவது சட்டப்பூர்வமாகப் பிரிய நினைத்த அந்தப் பெண், 2021-ஆம் ஆண்டு குடும்ப நீதிமன்றத்தில் ஒரு பொய்யான புகாரை அளித்துள்ளார். தனது கணவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி, ஆதாரமாக ஒரு புகைப்படத்தைச் சமர்ப்பித்த அவர், அதில் இருந்த கணவரின் சொந்தச் சகோதரியையே இரண்டாவது மனைவி எனத் தவறாக அடையாளப்படுத்தியுள்ளார்.
கணவர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் நீதிமன்றம் விவாகரத்து வழங்கிய நிலையில், சமீபத்தில் ஆவணங்களைச் சரிபார்த்த அந்த நபர் தனது தங்கையே மனைவியாகக் காட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தித் தவறான ஆதாரங்கள் மூலம் பெறப்பட்ட இந்த விவாகரத்தை ரத்து செய்யக் கோரி அவர் தற்போது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சொந்த ரத்த பந்தத்தையே தவறாகச் சித்தரித்துத் தீர்ப்புப் பெற்ற இந்த விசித்திர வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
