ரஷ்யாவில் கணவர் மீது ஏற்பட்ட தவறான சந்தேகத்தால், 39 வயது பெண் ஒருவர் அவரது ஆணுறுப்பைக் கடித்துத் துண்டாக்கிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்த அப்பெண் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இக்கொடூரத்தைச் செய்வதற்கு முன்பாகவே, கத்தியைப் பயன்படுத்தித் தனது பற்களைக் கூர்மையாக்கிக் கொண்டதாக விசாரணையில் அப்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கணவர் மீது மனைவி சுமத்திய கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதைக் கண்டறிந்தனர். வீண் சந்தேகத்தால் கணவருக்குக் கடுமையான உடல் பாதிப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக, நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு அப்பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
