தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு அண்மையில்தான் விடுமுறையில் ஊருக்குத் திரும்பியிருந்தார். இவரது மனைவி வளர்மதி பசுவந்தனை சாலையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர்களது 9 வயது மகள் அஸ்விகா 4-ஆம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மனைவியையும் மகளையும் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ரமேஷ் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தின் தாக்கத்தால் மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், வளர்மதியும் சிறுமி அஸ்விகாவும் எதிர்பாராதவிதமாக பேருந்தின் முன்சக்கரத்தில் சிக்கிக் கொண்டனர். பேருந்து சக்கரம் தலைப்பகுதியில் ஏறி இறங்கியதில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக ரமேஷ் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி போலீசார், காயமடைந்த ரமேஷை மீட்டு சிகிச்சைக்காகவும், உயிரிழந்த இருவரின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்காகவும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…