அட கொடுமையே… ‘Gay டேட்டிங்’ ஆப் மூலம்.. வாலிபரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய… 7 பேர் கொண்ட கும்பல்.. சிக்கியது எப்படி?… குஜராத்தில் நடந்த பயங்கர விபரீதம்…!!

Spread the love

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயது நபர் ஒருவர், ‘போலோ’ என்ற ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான டேட்டிங் செயலி மூலம் சிலருடன் பழகி வந்துள்ளார். அவர்களின் அழைப்பை ஏற்று, சுரேந்திரநகர் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஒரு பாழடைந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், அது காதல் சந்திப்பு அல்லாமல், திட்டமிட்ட ஒரு சதியாக முடிந்தது. அங்கு மறைந்திருந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரைச் சுற்றிவளைத்து தாக்கியதுடன், வலுக்கட்டாயமாக ஆடைகளைக் களையச் செய்து நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளது.

அந்த ஆபாசப் பதிவுகளைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டிய கும்பல், அவரிடமிருந்து ரூ.31,000 ரொக்கத்தைப் பறித்துக் கொண்டு, போலீசாரிடம் கூறக் கூடாது என்றும் அச்சுறுத்தியுள்ளது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர், சில நாட்களுக்குப் பிறகு துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்தார். தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் மொபைல் கண்காணிப்பு உதவியுடன் தீவிர விசாரணை நடத்திய போலீசார், இந்த சதியில் ஈடுபட்ட சாஹில் சவுகான், சக்தி பாஜிபாரா உட்பட ஏழு பேரையும் கைது செய்து, அவரிடமிருந்து பறிக்கப்பட்ட முழுத் தொகையையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சக்தி பாஜிபாரா, ஏற்கனவே இதுபோன்ற இரண்டு ஹனிடிராப் வழக்குகளில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் டேட்டிங் செயலிகள் மூலம் தனிமையில் இருக்கும் நபர்களைக் குறிவைத்து, ஒதுக்குப்புறமான இடங்களுக்கு வரவழைத்து மிரட்டி பணம் பறிப்பதையே இந்த கும்பல் வழக்கமாகக் கொண்டுள்ளதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம், இத்தகைய செயலிகளைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Swetha

Recent Posts

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

42 seconds ago

பரபரப்பு..! விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட த.வெ.க நிர்வாகி.. அடுத்த நொடியே பதவியை பறித்த கட்சி தலைமை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…

5 minutes ago

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

16 minutes ago

“அவருக்கு பதவி கொடுத்தது ஏன்…?” எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த அமைச்சர் நிர்மல் குமாரின் அதிரடி பதில்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…

23 minutes ago

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…

37 minutes ago

“சினிமாவே வேண்டாம்…!” மக்கள் என்னை நிராகரிச்சிட்டாங்க…கண்ணீருடன் முடிவெடுத்த சமந்தா… தடுத்து நிறுத்திய அந்த ஒரு நபர்…!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…

39 minutes ago