பகீர்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 7 வயது குழந்தை… சாக்லேட் கொடுத்து கடத்திக் கொன்ற வங்கி மேலாளர்.. உ.பி- யில் அதிர்ச்சி…!!

Spread the love

உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், அங்கத்வீர் என்ற 7 வயது சிறுவன் அவனது தாயின் காதலனான அர்பித் பராஷர் என்பவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளான். சிறுவனின் தந்தை குர்சேவக் பிழைப்புக்காகச் சவுதி அரேபியா சென்றுள்ள நிலையில், தாயார் குர்பிரீத் கவுருக்கும், எச்.டி.எஃப்.சி வங்கி பகுதி மேலாளரான அர்பித்துக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் நெருக்கமான நிலையைச் சிறுவன் அங்கத்வீர் பார்த்துவிட்டதால், சமூக அவப்பெயருக்கு அஞ்சிய அர்பித், சிறுவனுக்குச் சாக்லேட் தருவதாகக் கூறி காரில் கடத்திச் சென்று கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பஞ்சாபில் உள்ள பாட்டி வீட்டில் படித்து வந்த அச்சிறுவன், சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் மீரட்டிற்கு வந்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் காணாமல் போனது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர். அதில் சிறுவன் காரில் அழைத்துச் செல்லப்படுவது உறுதியானது. குற்றம் சாட்டப்பட்ட அர்பித் ஆரம்பத்தில் போலீசாரைத் திசைதிருப்ப முயன்றாலும், தீவிர விசாரணைக்குப் பிறகு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் காட்டிய இடமான பத்ரகாலி வனப்பகுதியின் புதர்களிலிருந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. கடத்தல் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்த போலீசார், கொலைக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் வேகன்-ஆர் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

முன்பு குர்பிரீத் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றியபோது, தினமும் பேருந்தில் பயணம் செய்ததால் திருமணமான அர்பித்துக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. தற்போது கொலைக் குற்றவாளியான அர்பித் கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடந்து வரும் வேளையில், இந்தக் கொடூரக் கொலையில் தாய்க்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுவரை தாய் மீது எந்தக் குற்றச்சாட்டும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அவரது பங்கு குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

53 minutes ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

1 மணத்தியாலம் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

2 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

2 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

2 மணத்தியாலங்கள் ago