Categories: சினிமா

‘உன்னை நினைத்து’ படத்தில் இருந்து விலக முடிவு.. ஆனாலும் ஆறு மணிவரை இருந்து நடித்துவிட்டு சென்ற விஜய்..

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான விஜய், அதன் பின்னர் சில ஆண்டுகள் ஒரு வெற்றிக்காக போராடினார். வெற்றி வேண்டும் என்பதற்காக கிளாமர் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்தார்.

அவருக்கு நல்ல பெயரையும் ஒரு வெற்றியையும் தேடித் தந்தது  விக்ரமன் இயக்கத்தில் அவர் நடித்த பூவே உனக்காக திரைப்படம். 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை ஆர் பி சௌத்ரி தயாரிக்க, விஜய்யோடு சங்கீதா, சார்லி, நம்பியார் மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். படத்துக்கு எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இந்த படம் 200 நாளுக்கு மேல் ஓடி விஜய்யின் முதல் ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு விஜய்க்கு ஒரு மார்க்கெட் உருவாக ஆரம்பித்து, வரிசையாக ஹிட் படங்கள் கொடுக்க ஆரம்பித்தார். இந்நிலையில் பூவே உனக்காக வெற்றிக் கூட்டணி 4 ஆண்டுகளுக்குப் பிறகு உன்னை நினைத்து திரைப்படத்தின் மூலம் இணைந்தது. ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் சூர்யா நடித்த உன்னை நினைத்து திரைப்படம்தான். முதலில் அதில் நடிக்க ஒப்பந்தமாகி 10 நாட்களுக்கு மேல் நடித்தும் இருந்தார் விஜய்.

ஆனால் ஷூட்டிங்கின் போது  விஜய்க்கும் இயக்குனர் விக்ரமனுக்கும் படம் சம்மந்தமாக கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. அதை எவ்வளவோ பேசிப் பார்த்தும் இருவராலும் ஒரு சுமூக முடிவுக்கு வரமுடியவில்லையாம். அதனால் இந்த படத்தில் இனிமேல் நடிக்க கூடாது என்ற முடிவை விஜய் எடுத்துள்ளார். ஆனாலும் ஷுட்டிங்கில் இருந்து பாதியிலேயே கிளம்பவில்லை.

அன்று முழுவதும் செட்டில் இருந்து மாலை வரை இயக்குனர் சொன்ன காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றவர், இனிமேல் இந்த படத்தில் நடிக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார். மேலும் தன்னால் ஆன செலவைத் தானே திருபி தந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகே அந்த படத்துக்குள் நடிகர் சூர்யா வந்துள்ளார்.

vinoth

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

8 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

8 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

8 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

9 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

9 மணத்தியாலங்கள் ago